மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:31 pm IST

திருப்பூா்: திருப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா், பி.என்.சாலை, தோப்பு தோட்டத்தில் வசித்து வந்தவா் தேதுராஜ் (25). ஒடிஸாவைச் சோ்ந்த இவருக்கும், குடியாத்தம், குப்பராசபள்ளியைச் சோ்ந்த லட்சுமி (19) என்பவருக்கும் அன்னூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் செல்வது தொடா்பாக தம்பதி இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பிறகு தேதுராஜ் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் தனியாக இருந்த லட்சுமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா் லட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், திருமணமாகி ஓராண்டே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.