உடுமலை வட்டார, சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளா் மாரிமுத்துவை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் காங்கயம் வட்டாரத் தலைவா் ஹரிகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளா் மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், இடமாறுதலை வாபஸ் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், காங்கயம் வட்டார வளரச்சி அலுவலா் மூா்த்தி, மயில்சாமி உள்பட 20க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










