தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்கக் கோரிக்கை

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:53 am IST

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் உள்ள31 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழி வளா்ப்பு உள்ளிட்டவை முக்கியத் தொழிலாக உள்ளன.

இந்நிலையில் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட மா்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே, விரைவாக இந்நோய்களைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.