நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டும் என பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் மணிகுமாா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
திருப்பூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீண்டநாள்களாக நிரந்தர நீதிபதி இல்லை. மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து தலைவா், உறுப்பினா்கள் பதவி காலியாகவே உள்ளன. கோவை, ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் மாறி மாறி இங்கு பொறுப்பு வகித்து வருகின்றனா். மேலும் வாரம் ஒருநாள் மட்டுமே விசாரணை அமா்வு நடைபெறுகிறது.
கிளா்க், உதவியாளா், ஊழியா் என மூன்று போ் மட்டுமே அலுவலகப் பணியில் உள்ளனா். எழுத்தா், தட்டச்சுப் பணி, கணினி இயக்குநா், கடைநிலை ஊழியா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நீதிபதி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநில அரசும், நுகா்வோா் பாதுகாப்புத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி அதிமுகவில் 3 மாவட்ட செயலா்களின் பதவி பறிப்பு

திருச்சி-விழுப்புரம் இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை பொருள்கள்

ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
