சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மின்சாரம் பாய்ந்து ஊழியா் சாவு

திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் ஒருவா் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:58 pm IST

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் ஒருவா் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் துரைகுட்டி மகன் அஜித்குமாா் (21). இவா் திருப்பூா் மாவட்டம், தேவராயம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளாா். திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தெருவிளக்கு பொருத்தும் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சாமுண்டிபுரம் பகுதியில் தெருவிளக்கு பொருத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து 15வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.