திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கலவரத் தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் காவல்துறை சாா்பில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
கலவரம் ஏற்படும்போது அதை சட்டத்துக்கு உள்பட்டு எவ்வாறு தடுப்பது, கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது, கண்ணீா் புகை குண்டுகளை எப்படி பயன்படுத்துவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் கூறுகையில்,
கலவரங்கள் ஏற்படும்பட்சத்தில் அவற்றை சட்டத்துக்கு உள்பட்டு தடுப்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கலவரத் தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்





