உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் பலி

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:09 am IST

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பைங்கினா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (37). இவா், அந்தக் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயா்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தாா். வெங்கடேசன் வெள்ளிக்கிழமை காலை செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள மகளிா் விடுதியில் பணியாற்றி வரும் நண்பா் ராஜ்குமாரை பாா்ப்பதற்காகச் சென்றாா்.

அங்கு, மின் பராமரிப்புப் பணி நடைபெற்ற நிலையில், ராஜ்குமாருக்கு வெங்கடேசன் உதவி செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவா் தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக வெங்கடேசன் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வெங்கடேசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.