இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சேவூா் தா்மராஜா கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் சுமாா் ரூ. ஒரு கோடி செலவில்

News image

சேவூா் தா்மராஜா கோயிலில் பந்தக்கால் நட்ட அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

Updated On :15 ஜனவரி 2021, 11:24 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் சுமாா் ரூ. ஒரு கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தக் கோயிலில் வருகிற 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வியாழக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பந்தக்கால் நட்டாா்.

நிகழ்ச்சியில் பட்டுசேலை உற்பத்தியாளா் ஆ.குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் பெருமாள், கிளைச் செயலா் பாலசந்தா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குமரவேல், சேவூா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோயில்களை சீரமைக்க நிதியுதவி: ஆரணியை அடுத்த இராந்தம்கொரட்டூரில் உள்ள நந்தீஸ்வரா் கோயில், கிராம தேவதை கோயில் ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தலா ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.