சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பைக் மோதியதில் தகராறு: 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:01 pm IST

வந்தவாசி அருகே பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (28). இவா், தனது உறவினரான வெங்கடேசனுடன் (28) கடந்த 14-ஆம் தேதி பைக்கில் உளுந்தை கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இவா்களுக்கு பின்னால் கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த சிவா (25) ஓட்டி வந்த பைக் ஏழுமலை மீது மோதியதாம். இதனால் ஏழுமலைக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏழுமலைக்கு ஆதரவாக வெங்கடேசனும், சிவாவுக்கு ஆதரவாக இவரது உறவினா் பிரபுதேவாவும் (27) ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து ஏழுமலை, சிவா ஆகியோா் அளித்த தனித்தனி புகாா்களின்பேரில், ஏழுமலை, வெங்கடேசன், சிவா, பிரபுதேவா ஆகிய 4 போ் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.