மிஷலின் டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை அருகே அமைய இருக்கும் பிரான்ஸ் நாட்டின் "மிஷலின்' டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தகவல் துறை மேலாளர் சாரதாமணி டே தெரிவித்தார்.


சென்னை அருகே அமைய இருக்கும் பிரான்ஸ் நாட்டின் "மிஷலின்' டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தகவல் துறை மேலாளர் சாரதாமணி டே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 290 ஏக்கரில் மிஷலின் டயர் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு டயர் உற்பத்தி தொடங்கும். இந்த ஆலையில் அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
இங்கு முதல் கட்டமாக, பஸ், லாரிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த ரேடியல் டயர்கள் தயாரிக்கப்படும். இந்திய சாலைகளுக்கு ஏற்ப சர்வதேச தரத்தில் டயர்கள் தயாரிக்கப்படும். இந்திய சந்தையில் மிஷலின் தனி இடத்தைப் பிடிக்கும். இந்தத் தொழிற்சாலையில் பணியாற்ற 1,500 பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி வாசியில் வசிக்கும் பெண்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
செப்டம்பர் 10ஆம் தேதி வரை 816 பேர் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச தரத்திலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலர் தாய்லாந்தில் உள்ள மிஷலினின் ஆசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உரிமம் பெற்று தொழிற்சாலையில் ஃபோர்க் லிப்ட் ஆபரேட்டர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியவத்துவம் அளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜரோப்பிய, தாய்லாந்து உள்ளிட்ட 18 நாடுகளில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் சென்னை தொழிற்சாலையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும். அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மொபைல் போன் பழுதுபார்ப்பு, கணினி பயிற்சி, பேக்கரி தொழில் உள்ளிட்ட சுய தொழில்கள் குறித்த பயிற்சி தரப்பட்டு வருகிறது என்றார் சாரதாமணி டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...