ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட "அம்ருத்' கரும்புச் சர்க்கரையை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
புதிய சர்க்கரையை அறிமுகப்படுத்தி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி சர்க்கரை வர்த்தகம் நடைபெறுகிறது. அவற்றில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே நிறுவனங்களின் "பிராண்டட்' ரக சர்க்கரை விற்கப்படுகின்றது.
பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரும்புச் சர்க்கரையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் அதிக ஊட்டச் சத்து கொண்ட கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரும்புச் சர்க்கரையின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
புதிய சர்க்கரையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக இது குறித்து 3 மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். கரும்புச் சர்க்கரையில் மக்கள் எதிர்பார்க்கும் சுவை, தரம், மணம் போன்றவை குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், சுகாதாரமான முறையிலும் கரும்புச் சர்க்கரையைத் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்திலான உற்பத்தி ஆலை நிறுவப்பட்டது.
"அம்ருத்' கரும்புச் சர்க்கரையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், சுண்ணாம்புச் சத்து, கால்சியம் போன்ற சத்துகள் இயற்கையாகவே உள்ளன. தேநீர், இனிப்பு வகைகள், பழரசம் போன்றவற்றைத் தயாரிக்க இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். 500 கிராம் எடை கொண்ட சர்க்கரையின் விலை ரூ. 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தில் தற்போது ஆண்டுக்கு 5 ஆயிரம் டன் "அம்ருத்' கரும்புச் சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியும். இந்த சர்க்கரைக்கு உள்ள தேவையைப் பொருத்து ஆலை விரிவாக்கம் செய்யப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


