தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மேலும் சரிவு

ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலை அடிப்படை விலையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே குறைந்து

Updated On :

ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலை அடிப்படை விலையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே குறைந்து (-)4.95 சதவீதமாக இருந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 முந்தைய ஜூலை மாத நிலையான (-)4.05 சதவீதத்தைவிட ஆகஸ்டில் பணவீக்க நிலை மேலும் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் பூஜ்ய நிலைக்கும் கீழே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
 வெங்காயம், பருப்பு வகைகள் தவிர பெரும்பாலான உணவுப் பொருள்களின் மொத்த விலை குறைந்தது. சில உணவு வகைகளின் மொத்த விலை மிகச் சிறிய அளவில் அதிகரித்தது. வெங்காயத்தின் மொத்த விலை 65% அதிகரித்தது. பருப்பு மொத்த விலை 36% அதிகரித்தது.
 இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் கணிசமாக ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று இந்திய தொழிலக மற்றும் வர்த்தக சபைகளின் சம்மேளனத்தின் தலைவர் ஜோத்ஸ்னா சூரி கோரிக்கை விடுத்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.