"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தால் நாட்டின் தொழில் சூழலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழிலக - வர்த்தக சபைகளின் சம்மேளனம் (ஃபிக்கி) தெரிவித்துள்ளது.
புது தில்லியில் ஃபிக்கி அமைப்பின் தலைமை இயக்குநர் தீதார் சிங் தெரிவித்ததாவது:
இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாகத் திகழும்படிச் செய்யும் குறிக்கோளுடன் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்த திட்டம் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல பலனைத் தரத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் தொழில் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
தொழில் தொடங்குவதற்கும் தொழில் நடத்துவதற்கும் ஏற்ற சூழல்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் ஒப்புதல்கள் வழங்குவதில் தெளிவு, சீரான பரிசீலனை முறைகள் ஆகியவற்றைக் காண முடிகிறது. இதன் மூலமாக, தொழில் திட்டங்களை விரைவில் செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்தான், தயாரிப்பு தொடர்பான முதலீட்டுத் திட்டங்கள் மிக அதிக அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், மாநில அளவில் இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவை விரைவில் எடுக்கப்படும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

