சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மும்பை பங்குச் சந்தையில் 355 புள்ளிகள் சரிவு

சர்வதேசப் பொருளாதார நிலை தொய்வடைந்ததைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 355 புள்ளிகள் சரிந்தது.

Updated On :

சர்வதேசப் பொருளாதார நிலை தொய்வடைந்ததைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 355 புள்ளிகள் சரிந்தது.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் வளர்ச்சியைக் கண்டு வந்த சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் உயர்வடைந்தது. இது 4 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 541 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களில் மாசுக் கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டது.

மேலும் சீனாவின் பொருளாதாரத் தேக்க நிலை ஆசியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் அறிக்கை பங்குச் சந்தையில் மந்த நிலையைத் தோற்றுவித்தது. உலகம் முழுவதும் உலோக நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலை இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் உலோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 5.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

டாடா மோட்டர்ஸ், கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை நஷ்டம் அடைந்தன.

வார வர்த்தக இறுதியில் சென்செக்ஸில் 355 புள்ளிகள் சரிவுடன் 25,863 என நிலைத்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 10,128.55 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 113 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வார வர்த்தக இறுதியில் நிஃப்டி குறியீடு 7,868 புள்ளிகளாக முடிவுற்றது.

முந்தைய இரு வாரங்களில் தேசிய பங்குச் சந்தையில் 326 புள்ளிகள் வளர்ச்சி இருந்தது. இது 4.27 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த வாரம் தேசிய பங்குச் சந்தையில் ரூ. 62,911.56 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.