ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்க மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
குறிப்பாக விடாரா ப்ரீஸா மற்றும் ஹூண்டாய் க்ரேட்டாவுக்கு போட்டியாக, காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்டில் , பெயரிடப்படாத 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது.
ஹோண்டாவின் ஹெச்ஆர்வி மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 7 சீட்டர் எஸ்யூவி, இந்த மாதம் நடைபெற உள்ள பிலிப்பைன் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் எனத்தெரிகிறது. ஹோண்டாவின் தாய்லாந்து ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி, இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தைகளை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்டைலான டிசைன், நல்ல கிரவுண்ட் க்ளியரன்ஸுடன் வெளிவரும் இந்த வாகனத்தில் தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபகாலத்தில் எஸ்யூவி ரக கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே பிஆர்-வி எஸ்யூவியை சந்தைப்படுத்தியது.

அதன் வரவேற்பை தொடர்ந்து இந்த புதிய 7-சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது ஹோண்டா நிறுவனம். இதைத்தவிர இந்த வருட இறுதிக்குள் அக்கார்ட் ஹைபிரிட் செடானையும், அடுத்த வருடத்தில் புதிய சிவிக் மாடலையும் அந்நிறுவனம் களமிறக்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


