பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்வேறு கால அளவுகளைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.1%-0.8% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒருவாரம் முதல் ஐந்தாண்டுகள் வரையிலும் மற்றும் அதற்கு மேலும் கால அளவுகளைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 4.5 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூத்தகுடிமக்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் 0.50 சதவீத வட்டி எப்போதும்போல் தொடரும்.
வரி சேமிப்புகளுக்காக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும். அதேசமயம், என்ஆர்இ டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அந்த அறிக்கையில் ஐஓபி தெரிவித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 3,342 கிளைகளும், 3,278 ஏடிஎம் மையங்களும் உள்ளன. கடந்த 2017 டிசம்பர் மாத நிலவரப்படி இந்த வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3,68,128 கோடியை எட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










