தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் ரூ.3,961 கோடி

வீட்டு வசதிக்கு நிதியுதவி வழங்கி வரும் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.3,961 கோடி நிகர லாபம் ஈட்டியது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:32 pm

DIN

வீட்டு வசதிக்கு நிதியுதவி வழங்கி வரும் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.3,961 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த 2016-17 நிதி ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால அளவில் ஈட்டிய லாபமான ரூ.3,079.33 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 28.63% அதிகம். வருவாய் ரூ.18,040.59 கோடியிலிருந்து 17.78% அதிகரித்து ரூ.21,248.79 கோடியானது.
சென்ற முழு நிதி ஆண்டில் மொத்த வருவாய் ரூ.61,087.63 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.69,141.67 கோடியாகவும், நிகர லாபம் ரூ.11,051.12 கோடியிலிருந்து 39.23 சதவீதம் அதிகரித்து ரூ.16,254.96 கோடியாகவும் இருந்தன.
முதலீட்டாளர்களுக்கு சென்ற நிதி ஆண்டுக்கு ரூ.2 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.16.50 இறுதி ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.