உள்நாட்டில் யூரியா உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சகத்தின் உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
உள்நாட்டில் யூரியா உற்பத்தி கடந்த 2017-18 நிதி ஆண்டில் 2.40 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஆலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பாண்டில் அனைத்து ஆலைகளின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் யூரியா உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 1.6 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் ஆண்டுக்கு 3 கோடி டன் யூரியா தேவை என்ற நிலையில் அதற்கான பற்றாக்குறை நடப்பாண்டிலும் ஏற்படும். எனவே, தேவையை ஈடு செய்ய 50-60 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜென்-ஸீ ஆதரவுக்கு மத்திய அரசு புது முயற்சி! நாள்தோறும் ஒரு பல்கலை.க்கு ஒரு அமைச்சர் பயணம்!

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதானா? கேப்டன் கூறுவதென்ன?

வாகனங்களின் விலையை உயா்த்தும் ஹூண்டாய் இந்தியா!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!
விடியோக்கள்

பைத்தியம் என்கிறார்! அடிக்க வருகிறார்! பேரவையில் காரசார விவாதம்! | TN Assembly | TVK



