பொதுத் துறையைச் சேர்ந்த விஜயா வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 43.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் விஜயா வங்கியின் வருவாய் ரூ.3,935.77 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,510.11 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமான அளவாகும்.
வாராக் கடன் மேம்பட்டுள்ள நிலையிலும் வங்கியின் நிகர லாபம் ரூ.254.69 கோடியிலிருந்து 43.3 சதவீதம் சரிவடைந்து ரூ.144.34 கோடியாக இருந்தது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து குறைந்து 6.19 சதவீதமானது. நிகர வாராக் கடன் விகிதமும் 5.24 சதவீதத்திலிருந்து சரிந்து 4.10 சதவீதமாக காணப்பட்டது என விஜயா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



