மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கிலோ கிராமுக்கான வரையறையில் மாற்றம்: வணிக உலகை பாதிக்குமா?

ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்குப் பிறகு, "ஒரு கிலோ கிராம் என்றால் எவ்வளவு எடை?' என்பதற்கான வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2018, 7:34 am

ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்குப் பிறகு, "ஒரு கிலோ கிராம் என்றால் எவ்வளவு எடை?' என்பதற்கான வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றத்துக்கு, பிரான்ஸின் வெர்சாய் நகரில் நடைபெற்ற சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் விஞ்ஞானப் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதுவரை, காற்று படாமல், வெப்பம் தாக்காமல் கடந்த 1889-ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, ஒரு பிளாட்டின உலோகக் கலவையிலான உருளை வடிவத் துண்டு என்ன எடையோ, அந்த எடைதான் ஒரு கிலோ கிராம் என்பது வரையறையாக இருந்து வருகிறது.

"லே கிராண் கே' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் துண்டின் மாதிரி வடிவங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன.

எனினும், காலப்போக்கில் வெப்ப நிலை மாற்றம், அரிப்பு போன்ற காரணங்களால் அத்தகைய பொருள்களின் எடை குறையும் என்பதால், அந்த உருளை வடிவத் துண்டுகளின் எடைகளுக்கு இடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, அத்தகைய உலோகக் கலவைத் துண்டை அடிப்படையாக வைத்து, ஒரு கிலோவுக்கான வரையறையை நிர்ணயிப்பது முழு துல்லியமற்றது என்று விஞ்ஞானிகளிடையே கருத்து நிலவி வந்தது.

இந்த நிலையில், இந்த வரையறையை பிளாட்டினம் துண்டுக்கு பதிலாக, மின்காந்தக் கருவியை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைப்பதற்கான தீர்மானம் வெர்சாய் நகரிலுள்ள சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

உலகம் முழுவதிலும் தங்களது நாட்டின் சார்பில் கலந்து கொண்ட பெரும்பாலான விஞ்ஞானிகள், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும், கிலோ கிராம் மட்டுமின்றி, மின்சாரம் (ஆம்பியர்), வெப்பம் (கெல்வின்), அணுக்கள் போன்றவற்றின் அடிப்படைத் துகள்களின் அளவு (மோல்) ஆகியவற்றின் அலகுகளும் பழைய மாதிரி பொருள்களின் அடிப்படையில் இருந்து வந்ததற்கு  பதில், நவீன மின்காந்த முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது, அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று விஞ்ஞானிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

எடை மற்றும் பிற அலகுகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம், வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

எனினும், இந்த வரையறை மாற்றம் மக்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளிலோ, எடை தொடர்பான பிற செயல்களிலோ பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதுதான் தற்போதுள்ள முதல் கேள்வி.

"130 ஆண்டுகளாக கிலோ கிராமுக்கு குறைபாடான வரையறையை வைத்துக் கொண்டிருந்த நாம், தற்போது துல்லியமான வரையறைக்கு மாறியுள்ளதான் என்ன பயன்?' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையில், இந்த நமது அன்றாட வாழ்வில் இந்த புதிய வரையறை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நிபுணர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.
நாம் காய்கறி வாங்கும்போதோ, மளிகை சாமான் வாங்கும்போதே, ஏன் - விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை வாங்கும்போதோ கூட இந்த புதிய துல்லிய வரையறையால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள் அவர்கள்.

காரணம், இந்தப் புதிய வரையறை ஏற்படுத்தும் மாற்றம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அதாவது, புதிய வரையறை மூலம் ஒரு கிலோ கிராமில் 10 கோடியில் ஒரு பங்கு அளவு வித்தியசத்தைக் கூட துல்லியமாக அளவிட முடியும்.

அவ்வளவு துல்லியமாக அளவிட்டு, சராசரி மனிதர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை.

ஆனால், இந்தத் துல்லியம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
குறிப்பாக, மருந்து தயாரிப்பு போன்ற துறைகளுக்கு இந்த புதிய வரையறையால் கிடைக்கும் துல்லியம் மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

அந்த வகையில், நேரடியாக இல்லாவிட்டாலும், நீண்ட கால நோக்கில் மறைமுகமாவது இந்த புதிய வரையறை சமான்யனின் வாழ்வில் நன்மை பயக்கும் என்றே நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.