உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையில் மாருதி சுஸுகி தொடர்ந்து தனது தலைமையிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு செப்டம்பரில் 13,193-ஆக இருந்த மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை நடப்பாண்டில் 22,228-ஆக அதிகரித்து முதலிடத்தைப் பிடித்தது.
இதையடுத்து, 21,719 விற்பனை எண்ணிக்கையுடன் மாருதி ஆல்டோ இரண்டாவது இடத்திலும், 21,296 விற்பனை எண்ணிக்கையுடன் மாருதி டிசையர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
டாப் 10 விற்பனை பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ (18,631 கார்கள்) நான்காவது இடத்தையும், விட்டாரா பிரெஸ்ஸா (14,425 கார்கள்) ஐந்தாவது இடத்தையும், வேகன்ஆர் (13,252 கார்கள்) ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஹுண்டாய் மோட்டாரின் எலைட் ஐ20 இப்பட்டியலில் ஏழாவது இடத்திலும், கிராண்ட் ஐ10 எட்டாவது இடத்திலும், கிரெட்டா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
மாருதி சுஸுகியின் செலிரியோ 9,208 விற்பனை எண்ணிக்கையுடன் கடைசியாக பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. டாப் 10 கார் விற்பனை பட்டியலில் மாருதி சுஸுகி, மற்றும் ஹுண்டாய் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


