மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமேசானில் 11 மணி நேரம் பேட்டரி தாங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு அமேசானில் 11 மணி நேரம் பேட்டரி தாங்கும் வகையிலான எகோ இன்புட் போர்ட்டபில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனைக்கு வருகிறது.

News image
Updated On :6 டிசம்பர் 2019, 6:52 pm


இந்திய வாடிக்கையாளர்களுக்கு அமேசானில் 11 மணி நேரம் பேட்டரி தாங்கும் வகையிலான எகோ இன்புட் போர்ட்டபில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனைக்கு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதியே இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு வர உள்ளன. இவை தொடர்ந்து 10 மணி நேரம் பாடலை ஒலிக்கும். அதோடு 11 மணி நேரம் சார்ஜ் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

4,800 மெஹாஹட்ஸ் - 360 டிகிரி கோணத்தில் ஒலி அமைப்பு - 1.5 இன்ச் ஸ்பீக்கர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு அலெக்ஸா சாதனம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் எகோ இன்புட் போர்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக அமேசான் டிவைஸஸ் இந்தியாவின் தலைவர் பரக் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் தயாரிப்பின் விலை ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.