ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கேட்ஜெட் தொழில்நுட்பத்தில் இந்த வார புதுவரவுகளை தெரிஞ்சுக்கோங்க!

ரிக்கோவின் 360 டிகிரி கேமரா உங்கள் வாழ்க்கையை நேரலை-ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், எந்தவொரு நிகழ்விலும் 360 டிகிரி வீடியோக்களையும் ஸ்டில்களையும் பதிவு செய்வதற்கும் சிறந்தது.

News image
Updated On :16 டிசம்பர் 2019, 6:10 am

DIN

ரிக்கோ தீட்டா எஸ்சி 2 கேமரா:

Story image

ரிக்கோவின் 360 டிகிரி கேமரா எந்தவொரு நிகழ்வையும் நேரலை-ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், எந்தவொரு நிகழ்விலும் 360 டிகிரி வீடியோக்கள் மற்றும்  ஸ்டில்களை பதிவு செய்வதற்கும் சிறந்தது. நீங்கள் 4k வீடியோக்களை 30fps-இல் எடுக்கலாம் மற்றும் வயர்லெஸ் நெட்ஒர்க் மூலமாக பகிரலாம். விலை ரூ.21,000 மேலும் விபரங்களுக்கு  http://theta360.com/  

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865

Story image

மிகச் சிறந்த அதிவேக 5 ஜி, 5 வது gen AI, ஜிகாபிக்சல் புகைப்படம் மற்றும் டெஸ்க்டாப்- லெவல் கேமிங், 7.5 ஜி.பி.பி.எஸ் வேகம், 8k வீடியோக்கள், 200 மெகாபிக்சல் புகைப்படங்கள், டால்பி விஷன் வீடியோக்கள், 10-பிட் எச்டிஆர் கேமிங் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த எஸ்ஓசி 2020ஆம் ஆண்டில் பிரீமியம் முதன்மை தொலைபேசிகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://qualcomm.com/


சோனி எஸ்ஆர்எஸ் டபிள்யூஎஸ் 1

Story image


சோனி எஸ்ஆர்எஸ் டபிள்யூஎஸ் 1 ஸ்பீக்கர்  கேமிங் மற்றும் அதிரடி திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ஏற்றவை. உங்களது தோள்களில் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ. 21,000 http://store.sony.com/


மோட்டோரோலா ஒன் ஹைப்பர்

Story image


மோட்டோரோலாவின் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனில் உள்ள பாப்-அப் கேமரா 64 எம்.பி ஸ்டில்கள் மற்றும் 32 எம்.பி செல்பி கேமரா உள்ளது. 6.5  இன்ச் எச்.டி, 45w சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. விலை ரூ.28,500  http://motorola.com/


ஒமேகா சீமாஸ்டர் மூழ்காளர் 007

Story image


கிரேடு 2 அல்ட்ராலைட் டைட்டானியத்தில் வரும், பழுப்பு நிற கலரில் டைட்டானியம் மெஷ் பிரேஸ்லெட் போன்று இருக்கும். மாஸ்டர் க்ரோனோமீட்டரில் சிறந்த துல்லியம், காந்த எதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் சிறந்த நீர் எதிர்ப்பு உள்ளது. விலை ரூ.6.12 லட்சம் http://omegawatches.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.