நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 50,000 கோடி டாலரை (சுமார் ரூ.35 லட்சம் கோடி) விஞ்சும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்வதேச வர்த்தக சூழலைப் பொருத்தவரையில் மிகவும் சவாலானதாகவே உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ஏற்றுமதியானது சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சி விகிதத்தை நாம் எட்டுவோம்.
அந்த வகையில், நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியானது நடப்பு நிதியாண்டில் 50,000 கோடி டாலரைத் தாண்டும்.
வர்த்தக அமைச்சகத்தை பொருத்தவரையில், ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்க புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய சந்தைகளை அடையாளம் காணுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
புதிய தொழில் கொள்கை அமல்படுத்தவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அதற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிப்பது மட்டுமே பாக்கி என்றர் அவர்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி வரையிலான 10 மாத கால அளவில் ஏற்றுமதி 9.52 சதவீதம் வளர்ச்சி கண்டு 27,180 கோடி டாலராக இருந்தது. இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியானது ஆண்டுக்கு 13,000-15,000 கோடி டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

வெளியானது மாலிவுட் டைம்ஸ் டீசர்!






