நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.05 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 6.05 சதவீதம் சரிந்து 2,613 கோடி டாலராக இருந்தது. இறக்குமதி 13.45 சதவீதம் குறைந்து 3,958 கோடி டாலராக காணப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,345 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் இது 1,792 கோடி டாலராக காணப்பட்டது.
இரும்புத் தாது, மின் சாதனங்கள், நறுமணம் மற்றும் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி நேர்மறை வளர்ச்சியை கண்டுள்ளஅதேசமயத்தில், நவரத்தினங்கள் ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில் தங்கம் இறக்குமதி 62.49 சதவீதம் வீழ்ச்சியடைந்து 136 கோடி டாலராக காணப்பட்டது.
நடப்பாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான கால அளவில் ஏற்றுமதியானது 1.53 சதவீதம் சரிந்து 13,354 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், இறக்குமதி 5.68 சதவீதம் பின்னடைந்து 20,639 கோடி டாலரானது என அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


