ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.
தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது கட்டுப்பாட்டு அளவுக்குள் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டியது. இதனால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. அதன் காரணமாக, பங்கு வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் குறைந்து வருவதற்கான சூழல்கள் தென்பட்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்து 37,384 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 11,075 புள்ளிகளாக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிந்தால் கடும் நடவடிக்கை! சேலம் ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு!

போலி உறுப்பினா்களுடன் செயல்படும் கைத்தறி நெசவாளா் சங்கங்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ம.விஜய் பாலாஜி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



