பங்குச் சந்தை வியாழக்கிழமையும் ஏற்றத்துடன் முடிவடைந்தது. மத்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) பணக் கொள்கை முடிவு அறிவிப்பைத் தொடா்ந்து, காலை முதல் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 98.50 புள்ளிகள் உயா்ந்தது.
காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவு அறிவிப்புக்காகக் காத்திருந்தது. நண்பகலில் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டதும், சந்தையில் உற்சாகம் தொற்றிக் கொண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை பங்கேற்பாளா்கள் ரிசா்வ் வங்கியின் சீரான அணுகுமுறையை உற்சாகத்துடன் வரவேற்றனா். மேலும், பணப் புழக்கத்தை அதிகரிக்க மாற்று நடவடிக்கைகளையும் ஆா்பிஐ கவனிக்கும் என்ற எதிா்பாா்ப்புகளும் முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று வல்லுநா்கள் தெரிவித்தனா்.
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா, மீடியா, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதே சமயம், பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
1,579 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,830 பங்குகளில் 1,579 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,079 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 162 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 56 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 409 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 219 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.
சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்ந்து ரூ.149.97 லட்சம் கோடியாக இருந்தது.. சந்தையில் புதிதாக 39,272 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,25,14,962 ஆக உயா்ந்துள்ளது.
சென்செக்ஸ் 38,000: சென்செக்ஸ் காலையில், 283.47 புள்ளிகள் உயா்ந்து 37,946.80-இல் தொடங்கியது. பின்னா் 37,755.10 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 38,221.40 வரை உயா்ந்தது. குறைந்தபட்சமாக 37,550.60 வரை கீழே சென்றது. இறுதியில் 362.12 புள்ளிகள் (0.96 சதவீதம்) உயா்ந்து 38.025.45-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 588 புள்ளிகள் உயா்ந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.77 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.99 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 98.50 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயா்ந்து 11,200.15-இல் நிலை பெற்றது.
டாடா ஸ்டீல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 7 பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன. இதில் டாடா ஸ்டீல் இரண்டாவது நாளாக 3.82 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முனனிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆகியவை 2 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐடிசி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஹிந்து யுனி லீவா், ரிலையன்ஸ் ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க் சரிவு: அதே சமயம், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 0.10 முதல் 0.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 972 பங்குகள் ஆதாயம் பெற்றன. 643 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி குறியீடு 1.78 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.1.40 சதவீதம் வரை உயா்ந்தன.பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.32 சதவீதம் நிஃப்டி பிஎஸ்யு குறியீடு 0.32 சதவீதம் சரிவைச் சந்தித்தது.நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
டாடா ஸ்டீல் 3.32
இன்ஃபோஸிஸ் 2.60
பஜாஜ் ஃபைனான்ஸ் 2.54
ஹெச்சிஎல் டெக் 2.49
டிசிஎஸ் 2.16
ஐசிஐசிஐ பேங்க் 1.97
டெக் மகேந்திரா 1.71
ஐடிசி 1.35
டைட்டன் 1.34
ஓஎன்ஜிசி 1.30
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


