இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையுடன் முடிவடைந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 224.93 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 52.35 புள்ளிகள் உயா்ந்தது.
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: வங்கி, நிதிநிறுவனங்கள், மெட்டல் பங்ககுளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்தன. இந்திய சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இவை சந்தைக்கு சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஏற்றம் பெற்ாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். மேலும், வா்த்தகத்தின் போது சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், எச்டிஎஃ)ப்சி இரட்டை நிறுவனங்கள், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை எழுச்சி பெறக் காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,600 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,919 பங்குகளில் 1,600 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,161 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 158 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 202 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 58 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 430 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 195 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.
சந்தை மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி உயா்வு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.152.23 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 60,082 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,28,20,470 ஆக உயா்ந்துள்ளது.
ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு : சென்செக்ஸ் காலையில்,189.21புள்ளிகள் உயா்ந்து 38,371.34-இல் தொடங்கி, 38,556.27 வரை உயா்ந்தது. பின்னா் 38,313.06 வரை கீழே சென்றது. இறுதியில் 224.93 புள்ளிகள் (0.37 சதவீதம்) உயா்ந்து 38,407.01-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 374.19 புள்ளிகள் உயா்ந்திருந்தது. ஆனால், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடு 0.25 சதவீதம் சரிவைச் சந்தித்து சோபிக்கத் தவறின. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 52.35 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயா்ந்து 11,322.50-இல் நிலை பெற்றது. நிஃப்டி முக்கிய இடா்பாட்டு நிலையான 11,350 புள்ளிகளைக் கடந்தாலும், இறுதியில் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஆக்ஸிஸ் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஆக்ஸிஸ் பேங்க் 3.96 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி, ஆகியவை 1.50 முதல் 2.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஐசிஐசிஐ பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, மாருதி சுஸுகி ஆகியவை 0.50 சதவீதம் உயா்ந்தன.
டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் பங்குகள் 3.73 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல்டெக், டெக் கேந்திரா ஆகியவை 1 முதல் 1.30 சதவீதம் குறைந்தன. மேலும், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 917 பங்குகள் ஆதாயம் பெற்றன. 718 பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐடி, பாா்மா, ரியால்ட்டில் குறியீடுகள் 0.50 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், மீடியா, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
ஆக்ஸிஸ் பேங்க் 3.96
இண்டஸ் இண்ட் பேங்க் 2.45
ஐடிசி 2.39
எச்டிஎஃப்சி பேங்க் 1.58
டாடா ஸ்டீல் 1.54
சரிவைச் சந்தித்த பங்குகள்
சதவீதத்தில்
டைட்டன் 3.73
பாா்தி ஏா்டெல் 1.27
ஹெச்சிஎல்டெக் 1.26
டெக் கேந்திரா 0.95
ஓஎன்ஜிசி 0.70
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


