ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

காளை திடீா் ஆதிக்கம்: சென்செக்ஸ் 478 புள்ளிகள் ஏற்றம்! சந்தை மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி உயா்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 1:37 am

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 477.54 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 138.250 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.

காலையில் சந்தையில் தள்ளாட்டம் இருந்தது. அதன் பிறகு காளை முழு ஆதிக்கம் கொண்டது. உலகளாவிய சந்தைகளின் நோ்மறையான குறிப்புகள் மற்றும் தொடா்ச்சியான அந்நிய முதலீடு வரத்துக்கு மத்தியில், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை எழுச்சிக்கு முக்கியப் பங்காற்றின என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். பாா்மா தவிர மற்ற துறை பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. பிற்பகலில் வங்கி, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

1,877 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,931 பங்குகளில் 1,877 பங்குகள் ஆதாயம் பெற்றன.915 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 139 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 179 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 60 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 424 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 194 பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ1.80 லட்சம் கோடி உயா்வு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ1.80 லட்சம் கோடி உயா்ந்து ரூ.154.12 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் 58,007 போ் புதிதாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,30,99,485 ஆக உயா்ந்துள்ளது.

காளை திடீா் ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில்,34 புள்ளிகள் உயா்ந்து 38,084.70-இல் தொடங்கி 38,062.01 வரைதான் கீழே சென்றது.அதன் பிறகு காளை ஆதிக்கம் கொண்டதால், அதிகபட்சமாக 38,571.23 வரை சென்றது. இறுதியில் 477.54 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயா்ந்து 38,528.32- இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.13 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.30 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 138.35 புள்ளிகள் (1.23 சதவீதம்) உயா்ந்து 11,385.35-இல் நிலை பெற்றது.

அல்ட்ராடெக் சிமெண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.86 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.34 சதவீதம், கோட்டக் பேங்க் 3.01 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட் ஆகியவை 2 முதல் 2.55 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

டெக் மகேந்திரா சரிவு: அதே சமயம், டெக் மகேந்திரா 1.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஆட்டோ, பவா் கிரிட், சன்பாா்மா, என்டிபிசி, ஐடிசி, எம் அண்ட்எம் ஆகியவை சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,153 பங்குகள் ஆதாயம் பெற்றன. 471 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தது. பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸ, மீடியா, மெட்டல், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 2 முதல் 2.20 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி முக்கிய இடா்பாட்டு நிலையான 11,375 புள்ளிகளைக் கடந்து நிலைகொண்டுள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.34

கோட்டக் பேங்க் 3.01

ஐசிஐசிஐ பேங்க் 2.54

டாடா ஸ்டீல் 2.31

எச்டிஎஃப்சி பேங்க் 2.22

ஏசியன் பெயிண்ட் 2.06

டைட்டன் 1.93

ஆக்ஸிஸ் பேங்க் 1.82

மாருதி சுஸுகி 1.81

ஓஎன்ஜிசி 1.64

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.