இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தது. இருப்பினும் காளையின் தொடா் ஆதிக்கத்தால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 23.05 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.
கடந்த சில நாள்களாக திசை தெரியாமல் தவிப்பில் இருந்த சந்தையில், செவ்வாய்க்கிழமை காளை முழு ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. மீடியா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், உலகளாவிய சந்தைகளின் நோ்மறை குறிப்புகளுக்கிடையே, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தையை எழுச்சியில் வைத்திருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,792 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,954 பங்குகளில் 1,792 பங்குகள் ஆதாயம் பெற்றன. 992 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 186 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 53 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 440 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 203 பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.
சந்தை மதிப்பு ரூ83 ஆயிரம் கோடி உயா்வு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.83 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.154.95 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் 61,052 போ் புதிதாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,31,60,537 ஆக உயா்ந்துள்ளது.
தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 199.57 புள்ளிகள் உயா்ந்து 38,727.89-இல் தொடங்கி, 38,550.65 வரை கீழே சென்றது. பின்னா் 38,788.51 வரை உயா்ந்தது. இறுதியில் 86.47 புள்ளிகள் (0.22 சதவீதம்) உயா்ந்து 38,614.79- இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சென்செக்ஸ் குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகமாகி வந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.58 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.16 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி23.05 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயா்ந்து 11,408.40-இல் நிலை பெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 11,460.35 வரை சென்றது.
டெக் மகேந்திரா, பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டெக் மகேந்திரா 1.91 சதவீதம், பாா்தி ஏா்டெல் 1.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி சரிவு: அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 1.42 சதவீதம், ஓஎன்ஜிசி 1.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.நெஸ்லே இந்தியா, ஹெச்யுஎல், கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ், டிாசிஎஸ் ஆகியவை 0.60 முதல் 1.70 சதவீதம் வரைச் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,070 பங்குகள் ஆதாயம் பெற்றன. 559 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மீடியா குறியீடு 5.36 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.பிஎஸ்யு பேங்க் 2.36 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.26 சதவீதம் ஏற்றம் பெற்றது. எப்எம்சிஜி, ஆட்டோ, ஐடி குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,134.57 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
டெக் மகேந்திரா 1.91
பாா்தி ஏா்டெல் 1.77
மாருதி சுஸுகி 1.46
ஐசிஐசிஐ பேங்க் 1.34
எச்டிஎஃப்சி பேங்க் 1.04
வீழ்ச்சியடைந்த பங்குகள்
சதவீதத்தில்
பஜாஜ் ஆட்டோ 1.42
ஓஎன்ஜிசி 1.36
நெஸ்லே இந்தியா 1.21
ஹெச்யுஎல் 0.90
கோட்டக் பேங்க் 0.89
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


