கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்'

ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் தனது மூன்றாவது புதிய ஸ்டோரை திறக்க உள்ளது. 

News image

மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்

Updated On :25 ஆகஸ்ட் 2020, 8:12 am

ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் தனது மூன்றாவது புதிய ஸ்டோரை திறக்க உள்ளது. மெரினா பே சாண்ட்ஸில் உலகின் முதல் மிதக்கும் சில்லறை விற்பனை ஸ்டோராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் இணையதளமான டுடேயின் அறிக்கையின்படி, புதிய ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸில் மிதக்கும் கோள வடிவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் சிறந்த படைப்பாற்றலாக இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும், கவனத்தையும் ஈர்ப்பதற்காக ஒரு புது முயற்சியாக வித்தியாசமான இந்த ஸ்டோரை உருவாக்கியுள்ளோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆப்பிள் சிங்கப்பூரில் தனது முதல் ஸ்டோரை ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் கட்டிடத்தில் கடந்த 2017-இல் திறந்தது. ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள அதன் இரண்டாவது ஸ்டோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் ஸ்டோர் 'ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை' என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.