சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்த சென்செக்ஸ், நிஃப்டி

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்,

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2020, 10:33 pm


புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளன.  இறுதியில் சென்செக்ஸ் 14.61 புள்ளிகளும், நிஃப்டி 20.15 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சரிவர இல்லாத நிலையில்,  இந்திய சந்தைகள் எழுச்சியுடன் தொடங்கின. ஆனால்,  தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை. பிற்பகல் வர்த்தகத்தின் போது எதிர்மறையாக சென்றாலும், வங்கி, நிதி நிறுவனங்கள், உலோக துறை நிறுவன பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து சென்செக்ஸ் மீட்சி பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 178.25 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,086 நிறுவனப் பங்குகளில் 1,984 பங்குகள் ஆதாயம் பெற்றன. 932 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ1.14 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.178.25  லட்சம் கோடியாக இருந்தது.  சென்செக்ஸ் காலையில்  283.98 புள்ளிகள் கூடுதலுடன் 44,902.02}இல் தொடங்கி 44,953.01 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  பின்னர் 44,551.42 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில்  14.61 புள்ளிகளை இழந்து 44,632.65}இல் நிலைபெற்றது.

மாருதி சுஸýகி எழுச்சி:  சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12  பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி 7.45 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.  இதற்கு அடுத்ததாக ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை 3.50 முதல் 4.50 சதவீதம் வரை  உயர்ந்தன. மேலும்,   டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

எச்டிஎஃப்சி பேங்க் சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி பேங்க் 2.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப்  பட்டியலில் முன்னிலை வகித்தது.  இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,243 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 486 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 20.15 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்ந்து 13,133.90}இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 13,216.60 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.  நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 4.81 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆட்டோ, மெட்டல், மீடியா குறியீடுகள் 1.70 முதல் 2.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. 
ஆனால், ஐடி,  ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.