கடந்த அக்டோபரில் உலகில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஆப்பிள் ஐபோன் 12 பெற்றுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 திட்டமிடப்பட்டதைவிட சந்தைக்கு தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்டோபர் மாதத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே இது விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 12 ப்ரோ அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையான இரண்டாவது 5 ஜி ஸ்மார்ட் போன். மொத்தமாக அக்டோபர் மாதத்தில் மொத்த 5 ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ விற்பனை ஆகும்.
கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் ஆய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் வருண் மிஸ்ரா இதுகுறித்து, ஐபோன் 12 சீரிஸின் தேவை இந்த் ஆண்டு இறுதியில் அதிகமாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதேபோன்று கடந்த ஜனவரி - அக்டோபர் மாத காலத்தில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட் போன் வரிசையில் ஐபோன் 12 ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான சாம்சங்கின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
தொடர்ந்து 2021ல் ஐபோன் 12 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஐபோன் 12 சீரிஸ், 5 ஜி ஸ்மார்ட்போன் சந்தைக்கு உந்துதலை அளிப்பதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

