பல்வேறு சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் 117 புதிய எமோஜிகள் நடப்பாண்டில் அறிமுகமாகவுள்ளன.
தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட கலந்துரையாடல்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வார்த்தைகளை விட எமோஜிகள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை மக்கள் விரும்புகின்றனர். எளிமையாக இருப்பதாலும், பார்ப்பதற்கு வித்தியாசமாக வேடிக்கையாக இருப்பதாலும் எமோஜிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு 117 புதிய எமோஜிகள் அறிமுகமாகியுள்ளன. இவை யூனிகோடு கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன், கூகுள், ஆப்பிள், ட்விட்டர் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த எமோஜிகளின் பதிப்பை வெளியிட்ட உள்ளன. ஆண்டின் இரண்டாம் பகுதியில் இது கிடைக்கும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமான பாலினத்தை உள்ளடக்கிய எமோஜிகளைப் பெற இருக்கிறோம், திருநங்கைகளின் கொடி மற்றும் சின்னம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
மேலும், குமிழி தேநீர், கட்டிப்பிடிப்பது, குழந்தைக்கு பாலூட்டுவது, நிஞ்ஜா எமோஜி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. ஆனால், இவை முழுவதுமாக ஜூன் மாதத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


