ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான 'வாட்ஸ்ஆப் பே' செயலி எப்போது வரும்?
வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வாட்ஸ்ஆப் பே செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.


வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் 'வாட்ஸ்ஆப் பே' செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் செயலி தற்போது பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. உலக அளவில் 80 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், கூகுள் பே, போன் பே போன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கென 'வாட்ஸ்ஆப் பே' செயலியை கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே இதற்கான சோதனை முயற்சிகள் உலகம் முழுவதுமே நடைபெற்றன. இந்தியாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பைலட் மோடு முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் பே செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது வாட்ஸ் ஆப்பில் எவ்வாறு ஒரு புகைப்படத்தை, வீடியோவை உடனடியாக அனுப்புகிறீர்களோ அதுபோன்று வாட்ஸ் ஆப் பே மூலமாக மிக எளிதாக விரைவாக பணம் அனுப்ப முடியும் என்று மார்க் தெரிவிக்கிறார்.
வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுவதும் உள்ள மக்கள் உபயோகிக்கும் முக்கிய செயலியாக உள்ளது. அவ்வாறு இருக்கையில், வாட்ஸ் ஆப் பேவும் மக்களிடையே அதிகம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...