ஆப்பிளுக்கு எதிராக புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்: தடை செய்ய கோரும் ஐபோன் நிறுவனம்
"ஆப் ஸ்டோர் ரகசியம்" என்ற புதிய புத்தகத்தின் விற்பனையைத் தடுக்கும் முயற்சியில், ஆப்பிள் ஆசிரியர் டாம் சடோவ்ஸ்கி


"ஆப் ஸ்டோர் ரகசியம்" என்ற புதிய புத்தகத்தின் விற்பனையைத் தடுக்கும் முயற்சியில், ஆப்பிள் ஆசிரியர் டாம் சடோவ்ஸ்கி மற்றும் அதன் வெளியீட்டாளர் முர்மன் வெர்லாக் ஆகியோருக்கு ஆப்பில் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த வழக்கறிஞர் டாம் சடோவ்ஸ்கிக்கும் அவரது வெளியீட்டாளருக்கும் புத்தக ஆர்டர்களை வழங்குவதை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் புத்தகத்தின் அனைத்து நகல்களையும் திரும்பப் பெறவும், புத்தகத்தின் அனைத்து கையெழுத்துப் பிரதிகளை அழிக்கவும் கோரியுள்ளனர்.
ஐபோன் தயாரிப்பாளரின் இந்தக் கோரிக்கைகளை வெளியீட்டாளர் முர்மனும் புத்தக ஆசிரியரும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை என்று ஆப்பிள் வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் மற்றும் முன்னாள் ஜெர்மன் ஆப் ஸ்டோர் மேலாளர் சடோவ்ஸ்கி மற்றும் வெளியீட்டாளர் வெர்லாக் ஆகியோர் ஐபோன் நிறுவனத்துக்கு எதிராக ஐபோன் தயாரிப்புக்களைப் பற்றி ஜெர்மன் மொழியில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்தை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின்படி, அனுமதிக்கப்படாத ரகசிய "வணிக ரகசியங்களை" புத்தக ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறியுள்ளனர்.
ஜெர்மனியில் செவ்வாயன்று இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. சடோவ்ஸ்கியின் "ஆப் ஸ்டோர் ரகசியம்" என்ற இந்தப் புத்தகம், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மேலாளரின் பார்வையிலிருந்து ஆப்பிள் ஆப் ஸ்டோர் எவ்வாறு செயல்படுகிறது, அதன் திரைக்குப் பின்னால் இருக்கும் காட்சிகள் குறித்து பேசுகிறது.

சாடோவ்ஸ்கியின் ஆப்பிள் நிறுவனத்தின் பயணம், ஆப் ஸ்டோரில் பணியாற்றிய காலகட்டத்தில் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான சந்திப்புகள் குறித்தும் இந்த புத்தகம் விவரிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...