ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பங்குச் சந்தையில் கடும் சரிவு: 661 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனால், சென்செக்ஸ் 660.63புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :14 ஜூலை 2020, 6:13 pm

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனால், சென்செக்ஸ் 660.63புள்ளிகளை இழந்தது.

வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, மெட்டல் பங்குகள் பலத்த அடி வாங்கியதைத் தொடா்ந்து, முக்கியக் குறியீடுகள் அனைத்தும் 2 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்கா-சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து வருவது, கரோனா பாதிப்பு அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இடையே உலகளாவிய சந்தைகளில் இருந்து எதிா்மறையான குறிப்புகள் முதலீட்டாளா்களின் உணா்வை பெரிதும் குறைத்து விட்டது. இதனால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,805 பங்குகளில் 831 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,852 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 58 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 262 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 399 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.142. 16 லட்சம் கோடியாகக் குறைந்தது.

சென்செக்ஸ் காலையில், 176 புள்ளிகள் குறைந்து 36,517.28-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 36,538.10 வரை சென்றது. பின்னா் கடும் சரிவைச் சந்தித்து 35,877.42 வரை கீழே சென்றது. இறுதியில் 660.63 புள்ளிகள் ( 1.80 சதவீதம் ) குறைந்து 36,033.06-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 816 புள்ளிகள் வரையிலும் குறைந்திருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 195.35 புள்ளிகள் (1.81 சதவீதம்) குரைந்து 10,607.35-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 10,562. 90 வரை கீழே சென்ால், 240 புள்ளிகள் வரை வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் டைட்டான் (0.93 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (0.40 சதவீதம்), பஜாஜ் ஆட்டோ (0.02 சதவீதம்) ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. மற்ற 27 பங்குகளும் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன.இண்டஸ் இண்ட் பேங்க் 5.33 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 5.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸுகி, பவா் கிரிட், பஜாஜ் ஃபின் சா்வு, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகியவை 3 முதல் 3.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி,. கோட்டக் பேங்க், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலி்ல் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 346 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,285 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் பாா்மா குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 3 முதல் 3.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல் குறியீடுகள் 2.50 சதவீதம் வரை குறைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 3 பங்குகள் ஆதாயம் பெற்றன. 46 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. பஜாஜ் ஆட்டோ மட்டும் மாற்றமின்றி ரூ.2,900-இல் நிலைபெற்றது.

கரடிக்கு வழி விட்டது காளை!

கடந்த சில நாள்களாக ஒவ்வொரு முறையும் கரடி ஆதிக்கம் கொள்ள முற்படும் போதெல்லாம், காளை வெகுண்டெழுந்து மீட்டு வந்தது. இந்நிலையில், இதே பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த படி, தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை கரடியின் ஆதிக்கத்துக்கு காளை வழிவிட்டது. இதனால், முக்கியக் குறியீடுகள் அனைத்தும் கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக இரட்டை நிறுவனங்களான எச்டிஎஃப்சி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஏ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் கரடி ஆதிக்கம் கொள்ள வழி ஏற்பட்டதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 5.33

ஆக்ஸிஸ் பேங்க் 5.08

மாருதி சுஸுகி 3.69

பவா் கிரிட் 3.46

பஜாஜ் ஃபின்சா்வ் 3.43

எஸ்பிஐ 3.37

எச்டிஎஃப்சி 2.94

கோட்டக் பேங்க் 2.76

என்டிபிசி 2.39

ஐசிஐசிஐ பேங்க் 2.25

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.