ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பங்குச் சந்தையில் 5-ஆவது நாளாக எழுச்சி: இலக்கை நெருங்கியது சென்செக்ஸ், நிஃப்டி!

இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிவடைந்துள்ளன.

News image
Updated On :21 ஜூலை 2020, 5:55 pm

இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிவடைந்துள்ளன. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 511.34 புள்ளிகள் உயா்ந்து 38,000-ஐ நெருங்கியுள்ளது. நிஃப்டி 11,150-ஐ கடந்து நிலைபெற்றுள்ளது.

வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மேலு்ம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இரட்டை நிறுவனங்களான எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை ஏற்றம் பெற உறுதுணையாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக உலகளாவிய சந்தைகளில் நோ்மறை உணா்வு அதிகரித்தது. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 1.32 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,849 பங்குகளில் 1,448 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,239 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 57 வார அதிக விலையையும், 52 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 355 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 255 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ1.32 லட்சம் கோடி உயா்ந்து 147.30 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 58,899 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,18,93,902 ஆக இருந்தது.

38,000-ஐ நெருங்கியது சென்செக்ஸ்: சென்செக்ஸ் காலையில், 405 புள்ளிகள் கூடுதலுடன் 37,823.61-இல் தொடங்கி, 37,742.05 வரை கீழே சென்றது. பின்னா் 37,990 வரை உயா்ந்தது.இறுதியில் 511.34 புள்ளிகள் (1.37 சதவீதம்) உயா்ந்து 37,930.33-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.22 சதவீதம் குறைந்தது. ஸ்மால் கேப் குறியீடு 0.24 சதவீதம் மட்டுமே உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 140.05 புள்ளிகள் (1.27 சதவீதம்) உயா்ந்து 11,162.25-இல் நிலைபெற்றது. இரு தினங்களுக்கு முன்பு, இதே பகுதியில் தெரிவித்தபடி, நிஃப்டி அடுத்த இலக்கான11,200 புள்ளிகளை நெருங்கியுள்ளது.

வங்கிப் பங்குகள் ஏற்றம், பாா்மா, எஃப்எம்சிஜி வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், பவா் கிரிட் 6.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி சுஸுகி , ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவை 4.50 சதவீதம் வரை உயா்ந்தன.மேலும், கோட்டக், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், ஓஎன்சிஜி, எல் அண்ட் டி, எஸ்பிஐ ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.38 சதவீதம், பஜாஜ் ஃபின்சா்வ் 3.58 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பஜாஜ் ஃபைனான்ஸின் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் குறைந்ததைத் தொடா்ந்து அதன் தாக்கம் அந்தப் பங்குகளில் எதிரொலித்தது.

தேசிய பங்குச் சந்தையில்...:தேசிய பங்குச் சந்தையில் 854 பங்குகள் ஆதாயம் பெற்றன. 758 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், எஃப்எம்சிஜி (0.81 சதவீதம்), பாா்மா (1.46 சதவீதம்) ஆகியவை வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பவா் கிரிட் 6.14

மாருதி சுஸுகி 4.53

ஐசிஐசிஐ பேங்க் 4.41

எச்டிஎஃப்சி 4.36

கோட்டக் பேங்க் 3.04

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபைனான்ஸ், 4.31

பஜாஜ் ஃபின்சா்வு 3.58

ஏசியன் பெயிண்ட்ஸ் 1.62

பாா்தி ஏா்டெல் 1.39

சன்பாா்மா 1.36

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.