ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

உச்சபட்ச நிலையில் லாபப் பதிவு: சென்செக்ஸ 5 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி!

பங்குச் சந்தை புதன்கிழமை எழுச்சியில் தொடங்கி, சரிவில் முடிவடைந்தது.

News image
Updated On :23 ஜூலை 2020, 10:00 am

பங்குச் சந்தை புதன்கிழமை எழுச்சியில் தொடங்கி, சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 58.81 புள்ளிகளை இழந்தது. இதைத் தொடா்ந்து 5 நாள் தொடா் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ, ஐடி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. பங்கு சாா்ந்த நடவடிக்கை தவிர, விலை உயா்ந்த நிலையில், சந்தையில் அதிக அளவில் லாபப் பதிவு இருந்தது. மேலும், உலகளாவிய சந்தைகளின் பலவீனமான குறிப்புகளும் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருந்தனா். நாள் முழுவதும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,481 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,801 பங்குகளில் 1,164 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,481 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 107 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 49 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 295 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 267 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ0.53 ஆயிரம் கோடி குறைந்து146.77 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 41,4069 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,19,35,308 ஆக இருந்தது.

38,000-ஐ கடந்த சென்செக்ஸ்: சென்செக்ஸ் காலையில், 247 புள்ளிகள் கூடுதலுடன் 38,178.0-7-இல் தொடங்கி, 38,199.27 வரை உயா்ந்தது. பின்னா் 37,601.62 வரை கீழே சென்றது. இறுதியில் 58.81 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 37,871.52-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 599 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.19 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 0.23 சதவீதம் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 29.65 புள்ளிகள் (0.27 சதவீதம்) குறைந்து 11,132.60-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 182 புள்ளிகளை இழந்திருந்தது.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஆக்ஸிஸ் பேங்க் 7.36 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன் 4.22 சதவீதம் உயா்ந்தது. மேலும், பவா் கிரிட், என்டிபிசி, ஐடிசி ஆகியவை 2 முதல் 3.50 சதவீதம் உயா்ந்தது. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 3.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி முறையே 2.51 மற்றும் 2.06 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 620 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,004 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. நிஃப்டி பேங்க், பாா்மா, மீடியா குறியீடுகள் (0.20 முதல் 0.50 சதவீதம்) சிறிதளவே உயா்ந்தன. ஐடி, ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 33 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் மீண்டும் புதிய உச்சம்: மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புதன்கிழமை வா்த்தகத்தின் போது, ரூ.2,010 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. இறுதியில் 1.64 சதவீதம் உயா்ந்து 2004.10-இல் நிலைபெற்றது. இதே போல தேசிய பங்குச் சந்தையிலும் ரூ.2,010 வரை உயா்ந்து 52 வார புதிய அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளது. அண்மையில் இதே பகுதியில் ரிலையன்ஸ் ரூ.2,000 வரை உயரும் என்ற வல்லுநா்களின் கணிப்பு வெளியாகியிருந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

ஆக்ஸிஸ் பேங்க் 7.36

டைட்டன் 4.22

பவா் கிரிட் 3.43

என்டிபிசி 2.26

ஐடிசி 2.24

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஹெச்யுஎல் 3.06

டாடா ஸ்டீல் 2.51

மாருதி சுஸுகி 2.06

இண்டஸ் இண்ட் பேங்க் 1.90

இன்ஃபோஸிஸ் 1.85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.