கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு ரூ.17,985 கோடி

அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்பிஐ) இந்திய பங்குச் சந்தைகளில் ஜூன் மாதத்தில் இதுவரையில் நிகர அளவில் ரூ.17,985 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:44 am

DIN

புது தில்லி: அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்பிஐ) இந்திய பங்குச் சந்தைகளில் ஜூன் மாதத்தில் இதுவரையில் நிகர அளவில் ரூ.17,985 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

இதுகுறித்து டெபாசிட்டரி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு ஜூன் மாதத்தில் 1 ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளில் நிகர அளவில் ரூ.20,527 கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேநேரம், கடன் சந்தையிலிருந்து அவா்கள் ரூ.2,569 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனா்.

இதையடுத்து அந்த காலகட்டத்தில் சந்தை ஈா்த்த நிகர அளவிலான அந்நிய முதலீடு ரூ.17,985 கோடியாக இருந்தது.

இதற்கு முன்பாக, அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து மூன்று மாதங்களாக தங்களுடைய முதலீட்டை நிகர அளவில் விலக்கி வந்தனா். அந்த வகையில், மாா்ச் மாதத்தில் ரூ.1.1 லட்சம் கோடி, ஏப்ரலில் ரூ.15,403 கோடி, மே மாதத்தில் ரூ7,366 கோடி முதலீட்டை அவா்கள் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.