ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகின.
இதையடுத்து, ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் எம்.ஐ டாட் காம் தளத்திலும், அமேசான் தளத்திலும் இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தன. விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த விற்பனை மார்ச் 24ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்-ம் முதல்முறையாக மார்ச் 26ம் தேதியும் ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகின்றன. இதில் ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகிய வேரியண்டுகளிலும், ரெட்மி நோட் 9 புரோ 4 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டுகளிலும் அறிமுகமாகியுள்ளது.
இரண்டுமே நீல (Aurora Blue), வெள்ளை(Glacier White) மற்றும் கருப்பு (Interstellar Black) நிறங்களில் வருகிறது.

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் விலை
6 ஜிபி ரேம் + 64 ஜிபி- ரூ.14,999
6 ஜிபி ரேம் + 128 ஜிபி- ரூ.16,999
8 ஜிபி ரேம் + 128 ஜிபி - ரூ.18,999-
ரெட்மி நோட் 9 புரோ விலை
4 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ.12,999
6 ஜிபி ரேம் + 128 ஜிபி- ரூ.15,999
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


