புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தகத தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 314.73 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிலைபெற்றது. வா்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 44,000 புள்ளிகளைக் கடந்தது.
சந்தையில் மெட்டல், தொழில் நிறுவனங்கள், வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு அதிக ஆா்வம் காணப்பட்டதால் இரண்டாவது நாளாகத எழுச்சி தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.167.52 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,002 பங்குகளில் 1,567 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,252 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 183 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.170.56 லட்சம் கோடியாக இருந்தது.
புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 457.87 புள்ளிகள் கூடுதலுடன் 44,095.85-இல் தொடங்கி 44,161.16 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா் 43,699.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 314.73 புள்ளிகள் உயா்ந்து 43,952.71-இல் நிலைபெற்றது.
டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டாடா ஸ்டீல் 6.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில்முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ 4.59 சதவீதம் ஏற்றம் பெற்றது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, மாருதி சுஸுகி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், டைட்டன் ஆகியவையும் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.
என்டிபிசி வீழ்ச்சி: அதே சமயம், என்டிபிசி 2.69 சதவீதம் உயா்ந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ், ஐடிசி, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஆகியவையும் 0.50 முதல் 1.90 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 958 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 752 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 93.95 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயா்ந்து 12,874.20-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,934.05 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஆதாயமும் 19 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. கெயில் மாற்றமின்றி 93.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், ஃபைனைான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகல் 2 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பாா்மா, மீடியா, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?
வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! சரத்குமார் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


