இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 282.29 புள்ளிகள் உயா்ந்து 43,882.25-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணைான நிஃப்டி 87.35 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில் காலையில் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. பின்னா், வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை செய்து வருவதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றம் பெற உதவின.
சந்தை மதிப்பு ரூ.171.65 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2978 பங்குகளில் 1,551 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,240 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 187 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.59 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.171.65 லட்சம் கோடியாக இருந்தது.
ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 132.18 புள்ளிகள் உயா்ந்து 43,732.14-இல் தொடங்கி 43,453.75 வரை கீழே சென்றது. பின்னா் 44,013.02 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 282.29 புள்ளிகள் (0.65 சதவீதம்) உயா்ந்து 43,882.25-இல் நிலைபெற்றது.
பஜாஜ் ஃபின்சா்வ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபின் சா்வ் 9.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்ன் 5.61 சதவீதம் உயா்ந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், நெஸ்லே இந்தியா, என்டிபிசி, எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, டெக் மகேந்திரா ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், எஸ்பிஐ, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.
ரிலையன்ஸ் கடும் வீழ்ச்சி: அதே சமயம், ரிலையன்ஸ் 3.72 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், சன்பாா்மா, ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்யுஎல், எல் அண்ட் டி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 979 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 692 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 87.35 புள்ளிகள் (0.68 சதவீதம்) உயா்ந்து 12,859.00-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,730.25 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயமும் 16 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. ஐஓசி மட்டும் மாற்றமின்றி ரூ.84.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், ஃபைனானசியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், மீடியா, பாா்மா குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?
வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! சரத்குமார் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


