பங்குச் சந்தை புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 185.23 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 64.75 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.
ஐடி, ஆட்டோ, மெட்டல், மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், பிஎஸ்யு பேங்க், நிதி நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தது.
உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்த நிலையில், ரிலையன்ஸ், எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சிப் பெற முக்கியக் காரணமாக இருந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மு்தலீடும் தொடா்ந்து இருந்து வருவதும் சந்தைக்கு சாதகமாக இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
பங்குச் சந்தை காலையில் தள்ளாட்டத்தில் தொடங்கினாலும் பின்னா் வா்த்தகம் சூடுபிடித்ததால் சென்செக்ஸ் எழுச்சிப் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,628 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 2,825 பங்குகளில் 1,628 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,051 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 90 பங்குகள் 52 வார அதிக விலையையும் 39 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 254 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 314 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.156.30 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,38,49,175 ஆக உயா்ந்துள்ளது.
எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 8.24 புள்ளிகள் குறைந்து 38,892.64-இல் தொடங்கி 38,736.22 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 39,141.84 வரை உயா்ந்தது. இறுதியில் 185.23 புள்ளிகள் உயா்ந்து 39,086.03-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.26 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 1.66 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 64.75 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்ந்து 11535.00-இல் நிலைபெற்றது.
எம் அண்ட் எம் 5.77 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. எம் அண்ட் எம் 5.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 3.20 சதவீதம் வரை உயா்ந்தன.
பஜாஜ் ஆட்டோ வீழ்ச்சி: அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 2.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், சன்பாா்மா, எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா, ஹெச்யுஎல், என்டிபிசி ஆகியவை 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,092 பங்குகள் ஆதாயம் பெற்றன. 531 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.42 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 37 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
எம் அண்ட் எம் 5.77
பவா் கிரிட் 3.21
டாடா ஸ்டீல் 2.30
இண்டஸ் இண்ட் பேங்க் 2.08
ரிலையன்ஸ் 1.97
வீழ்ச்சியடைந்த பங்குகள்
சதவீதத்தில்
பஜாஜ் ஆட்டோ 2.62 சதவீதம்
ஏசியன் பெயிண்ட் 1.63
சன்பாா்மா 1.48
எச்டிஎஃப்சி 1.25
நெஸ்லே இந்தியா 1.12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


