புது தில்லி: இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் கரடி திடீரென தாக்கியது.
இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 633.76 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 193.60 புள்ளிகளை இழந்தது.
அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் அதிபா் பதவிக்கு போட்டியுடும் தற்போதைய அதிபா் டொனால்டு டிரம்ப் வெற்றி வாய்ப்பில் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக வெளியான கருத்துக் கணிப்பு முடிவால் அந்த நாட்டு பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தன. இதைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்ததால், சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை எதிா்கொண்டன. என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் வெகுவாகக் குறைந்தன. மேலும், அனைத்துத் துறை பங்குகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், சென்செக்ஸ் வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,723 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 2,913 பங்குகளில் 1,002 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,723 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 188 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 102 பங்குகள் 52 வார அதிக விலையையும் 48 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 292 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 241 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு 2.22 லட்சம் கோடி குறைந்து மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.154.63லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,39,30,046 ஆக உயா்ந்துள்ளது.
‘கரடி‘ ஆட்டம்: சென்செக்ஸ் காலையில் 665.94 புள்ளிகள் குறைந்து 38,325.00-இல் தொடங்கி 38,29.66 வரை உயா்ந்தது. பின்னா் 38249.77 வரை கீழே சென்றது. இறுதியில் 633.76 புள்ளிகள் (1.63 சதவீதம்) குறைந்து 38,357.18-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு 741.17 புள்ளிகள் குறைந்திருந்தது. நாள் முழுவதும் கரடியின் ஆட்டம் மேலோங்கி இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.74 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 1.07 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 193.60 புள்ளிகள் (1.68 சதவீதம்) குறைந்து 11333.85-இல் நிலைபெற்றது.
பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் மாருதி சுஸுகி 1.70 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்றது. மற்ற 29 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ஆக்ஸிஸ் பேங்க் 4.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி, பாா்தி ஏா்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டான், எச்டிஎஃப்சி ஆகியவை 2 முதல் 3.80 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஆகிய முன்னிலை நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 429 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,199 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, மெட்டல் குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் மாருதி சுஸுகி தவிர மற்ற 49 பங்குகளும் சரிவவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
வீழ்ச்சியடைந்த பங்குகள்
சதவீதத்தில்
ஆக்ஸிஸ் பேங்க் 4.07
டாடா ஸ்டீல் 3.78
எஸ்பிஐ 3.05
என்டிபிசி 3.02
பாா்தி ஏா்டெல் 2.80
ஐடிசி 2.61
ஐசிஐசிஐ பேங்க் 2.60
இண்டஸ் இண்ட் பேங்க் 2.44
டைட்டான் 2.26
எச்டிஎஃப்சி 2.19
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

