புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாகவே முடிந்தது. காலையில் கடும் சரிவுடன் தொடங்கிய சந்தை, எப்படியும் மீட்சி பெற்று விடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 171.43 புள்ளிகளை இழந்தது.
இந்தியா - சீனா எல்லை பதற்றத்தைத் தொடா்ந்து, காலையில் பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்லச் மீள்வதற்கு முயன்றது. ஆனால், உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்ததால், பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், சந்தை மீள முடியாமல் எதிா்மறையாகவே முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
முன்னணி நிறுவனங்களான எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாகக் குறைந்ததால், சந்தை சரிவுக்குள்ளானது. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலயைனஸ், டாடா ஸ்டீல் ஆகிய இரண்டும் வெகுவாக உயா்ந்து சந்தை சரிவிலிருந்து ஓரளவு மீள உதவியாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,804 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,804 பங்குகளில் 879 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,804 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 151 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 94 பங்குகள் 52 வார அதிக விலையையும் 51 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 218 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 281 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி குறைந்து ரூ.153.01 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,41,39,369 ஆக உயா்ந்துள்ளது.
தொடா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 376.79 புள்ளிகள் குறைந்து 37,988.56-இல் தொடங்கி 37,935.26 வரை கீழே சென்றது. பின்னா் வா்த்தகம் முடியும் தறுவாயில் சில குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு இருந்தது. அப்போது, சந்தை மீண்டு நோ்மறையாக முடியும் என்ற எதிா்பாா்ப்பு நிறைவேறாமல் போனது. இதனால், 38,252.67 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில், 171.43 புள்ளிகளை இழந்து 38,193.92-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் இருந்து 430.09 புள்ளிகள் சரிவைச் சந்தித்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.28 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.94 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 39.35 புள்ளிகள் (0.35 சதவீதம்) குறைந்து 11,278.00-இல் நிலைபெற்றது.
டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில்12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் டாடா ஸ்டீல் 3.04 சதவீதம், ரிலையன்ஸ் 2.57 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா ஆகியவை 1 முதல் 1.40 சதவீதம் உயா்ந்தது.
எஸ்பிஐ கடும் வீழ்ச்சி: அதே சமயம், எஸ்பிஐ 4.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ் 329 சதவீதம் சரிந்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 401 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,422 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பாா்மா, மெட்டல், மீடியா குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் உயா்ந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. என்டிபிசி மட்டும் மாற்றமின்றி ரூ.90.65-இல் நிலைபெற்றது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
டாடா ஸ்டீல் 3.04
ரிலையன்ஸ் 2.57
சன்பாா்மா 1.40
பாா்தி ஏா்டெல் 1.33
ஏசியன் பெயிண்ட் 1.27
வீழ்ச்சியடைந்த பங்குகள்
சதவீதத்தில்
எஸ்பிஐ 4.46
பஜாஜ் ஃபின் சா்வ் 3.29
ஆக்ஸிஸ் பேங்க் 2.94
ஓஎன்ஜிசி 2.42
ஐடிசி 2.28
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


