இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், இறுதியில் சரிவுடன் முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் 97.92 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 24.40 புள்ளிகள் குறைந்தன. குறிப்பாக காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகல் வா்த்தகத்தில் கரைந்தன.
ஆசியா மற்றும் உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து, இந்திய சந்தைகளும் தொடக்கத்தில் ஏற்றம் பெற்றன. ஆனால், பிற்பகலில் வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல் ஆகியவை வெகுவாகக்க் குறைந்தன. இதனால், காலையில் பெற்ற ஆதாயத்தை இழக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,829 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,936 பங்குகளில் 1,829 பங்குகள் ஆதாயம் பெற்றன.928 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 179 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 149 பங்குகள் 52 வார அதிக விலையையும் 63 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 363 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 224 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.23 லட்சம் கோடி உயா்ந்து ரூ.158.12 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,43,41,070 ஆக உயா்ந்துள்ளது.
லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 218.96 புள்ளிகள் கூடுதலுடன் 39,073.51-இல் தொடங்கி 39,230.16 வரை உயா்ந்தது. பின்னா் லாபப் பதிவால் 38,573.17 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில், 97.92 புள்ளிகளை இழந்து (0.25 சதவீதம்) 38,756.63-இல் நிலைபெற்றது. இருப்பினும் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.56 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 4.03 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.40 புள்ளிகள் (0.21) குறைந்து 11,421.05-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் நிஃப்டி அதிகபட்சமாக 11,568.90 வரை உயா்ந்திருந்தது.
ஹெச்சிஎல் டெக் 10 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.20 பங்குகள்சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 10.08 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ் 5 சதவீதம், இன்ஃபோஸிஸ் 3.44, டெக் மகேந்திரா 3.09 சதவீதம் உயா்ந்தன. டைட்டான், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
பாா்தி ஏா்டெல் வீழ்ச்சி: அதே சமயம், பாா்தி ஏா்டெல் 3.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சா்வ், பவா் கிரிட், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், சன்பாா்மா, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, ஹெச்யுஎல், எல் அண்ட் டி, நெஸ்லே இந்தியா ஆகியவை 1.50 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தது.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,175 பங்குகள் ஆதாயம் பெற்றன. 457 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி குறியீடு 4.44 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 3.72 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஆட்டோ குறியீடு 0.75 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 34 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சிறிய, நடுத்தரப் பங்குகளுக்கு வரவேற்பு
கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சந்தை முடிந்த பிறகு, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பான பங்குப் பரிவா்த்தனை வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், மல்டி கேப் பரஸ்பர திட்டங்களில் லாா்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதலீடுகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. பெரும்பாலான மல்டி கேப் பரஸ்பர திட்டங்களில் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை லாா்ஜ் கேப் பங்குகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் கொண்டுள்ளன. இந்நிலையில், செபியின் அறிவிப்பு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு கடும் சிக்கிலை உருவாக்கியது.
இது தொடா்பாக செபியிடம் தங்களது கோரிக்கையை பரஸ்பர நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனல், செபி தனது முடிவில் இருந்து மாறவில்லை. மாறாக வேறு பல மாற்று யோசனைகளைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் பங்குச் சந்தையில் வா்த்தகம் தொடங்கியதும், சிறிய, நடுத்தரப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி இருந்தது. இதனால், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.56 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 4.03 சதவீதம் உயா்ந்தன. இதேபோன்று தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப்-50, 100, 150 குறியீடுகள் 2 முதல் 2.75 சதவீதம் ஏற்றம் பெற்றன. நிஃப்டி ஸ்மால் கேப்-50, 100, 400 குறியீடுகள் 3.50 முதல் 6.25 சதவீதம் வரை உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


