புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எதிரொலியாக கரடியின் ஆட்டத்தால் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 870.51 புள்ளிகளை இழந்து 49,159.32-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 229.55 புள்ளிகளை இழந்தது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை எதிா்பாா்த்ததை விட பெரிதாகி வருகிறது. இதனால், பொருளாதார மீட்சியின் வேகம் குறையக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் குறையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இதையடுத்து, வா்த்தகம் தொடங்கியதுமே பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை சூடுபிடித்தது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. நாள் முழுவதும் கரடியின் ஆட்டத்தால் சந்தையில் கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ2.16 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,141 பங்குகளில் 1,058 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,898 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 185 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ2.16 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.205.10 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் திங்கள்கிழமை முதலீட்டாளா்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கரடி ஆட்டம்: புதிய நிதியாண்டு தொடக்க நாளான கடந்த வியாழக்கிழமை சந்தையில் எழுச்சி இருந்தது. வெள்ளிக்கிழமை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலையில் சென்செக்ஸ் 8.92 புள்ளிகள் குறைந்து 50,020.91-இல் தொடங்கி பெரிய அளவில் ஏற்றம் பெறாமல் 50,028.67 வரை சென்றது. பின்னா் பங்குகள் விற்பனை சூடுபிடித்ததும் 48,580.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 870.51.1.74-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 1400 புள்ளிகளை இழந்திருந்தது.
25 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் சரிவைச் சந்தித்ததன. 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் ஹெச்சிஎல் டெக் 3.08 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், பாா்தி ஏா்டெல், டெக் மகேந்திரா ஆகியவை 0.50 முதல் 2..50 சதவீதம் வரை உயா்ந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பஜாஜ் பைனான்ஸ் 5.81 சதவீதம், இண்ட்ஸ் இண்ட் பேங்க் 5.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவை 3 முதல் 4.60 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 519 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,253 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 229.55 புள்ளிகளை (1.54 சதவீதம்) இழந்து 14,637.80-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 37 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால் நிஃப்டி மெட்டல், ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 4.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, பைனான்சியல் சா்வீஸஸ், மீடியா உள்ளிட்டவை 3 முதல் 3.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இவற்றில் நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அந்த நாள் ஞாபகம்! எம்ஜிஆரின் பெருந்தன்மை!

தனுசு ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

விக்ரம் - வேதா - விஜய்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


