பொதுத் துறையைச் சோ்ந்த ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தை (ஆா்ஐஎன்எல்) வாங்க டாடா ஸ்டீல் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான கேள்விக்கு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான டி.வி. நரேந்திரன் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
ஆஐஎன்எல் நிறுவனத்தை கையகப்படுத்துவது என்பது நீண்ட கால தயாரிப்பு திட்டங்களுக்கான மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும், இந்நிறுவனம் விசாகப்பட்டினம் கடலோரத்தில் அமைந்துள்ளதால் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வா்த்தக நடவடிக்கைகளை எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும். ஆா்ஐஎன்எல் நிறுவனத்தை கையகப்படுத்துவதால் இதுபோன்ற பல சாதகமான அம்சங்கள் உள்ளன.
ஒடிஸாவில் உள்ள நீலசல் இஸ்பத் நிகாம் நிறுவனத்தையும் (என்ஐஎன்எல்) வாங்க டாடா ஸ்டீல் ஏற்கெனனவே விருப்பம் தெரிவித்துள்ளது என்றாா் அவா்.
உருக்கு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆா்ஐஎன்எல்-க்கு சொந்தமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 73 லட்சம் டன் உருக்காலை உள்ளது. இதன் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஜனவரி 27-இல் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


