திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் மாணவா் சோ்க்கை

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் சேர விரும்புவோா், ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 12:09 am

DIN

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் சேர விரும்புவோா், ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரோம்பேட்டையில் இயங்கி வரும் மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல், 2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு பணியாளா்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தகுதி

வாய்ந்த மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி, 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பயிற்சி கால அளவு இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு, முதல்வா், மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழில் பயிற்சி நிலையம், மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகா், குரோம்பேட்டை, சென்னை 600 044 என்ற முகவரியை நேரிலோ, என்ற இணையதளத்தையோ அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்கள் அல்லது, மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி ஆக.30 என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.